இந்திய மாணவர் சங்கத்தின் மேற்குவங்க மாநிலக் குழு உறுப்பினரான சுதீப்தே குப்தா, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லும் வழியில், கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 23. அவர் சமீபத்தில்தான் ரவீந்திரபாரதி பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றார்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமை யிலான அரசு அனைத்து மாணவர் பேரவை தேர்தலுக்கும் தடைவிதித்துள்ளது. இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய முறையில் போராட்டம் நடத்த 4 இடதுசாரி மாணவர் அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன. இதன்படி ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல் லூரி சாலை மற்றும் ராணி ரஸ்மோனி சாலை யில் திரண்டனர். அரசின் ஜனநாயக விரோத நட வடிக்கையை எதிர்த்து பேரணியாக அவர்கள் செல்ல முயன்ற போது, போலீசார் மாணவர் கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தடியடித் தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கணக் கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு பேருந் துகளில் அலிப்பூர் சிறைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
பேருந்தில் சிறைக்கு மாணவர்களை அழைத் துச் செல்லும் வழியில் அவர்கள் மீது போலீசார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். பல மாணவர்கள் பேருந்திலிருந்து அடித்து கீழே தள்ளப்பட்டனர். அவ்வாறு தள்ளப்பட் டவர்களில் சுதீப்தே குப்தாவும் ஒருவர். போலீ சார் நடத்திய தாக்குதல் மற்றும் கீழே தள்ளிய தில் அவர் படுகாயமடைந்தார். தலை மற்றும் முகத்தில் அவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்ட தோடு, உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பேருந்திலிருந்து தள்ளப்பட்ட அவ ரை இந்திய மாணவர் சங்க தோழர்கள் தூக்கிச் சென்றனர். போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப் படாமல் தாமதிக்கப்பட்டது. மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், சில மணி நேரங் களில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இடதுசாரி தலைவர்கள் மேற்குவங்க மாநி லத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுதீப்தே குப்தா தாக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் பிமன்பாசு, குருதாஸ் தாஸ் குப்தா, கெத்தி கோஸ்வாமி, சூரியகாந்த் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். மாணவர் சங்கத் தலைவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் மேற்குவங்க மாநி லம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இடதுசாரி மாண வர் அமைப்புகள் விடுத்த அழைப்பின் பேரில் புத னன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நீதி விசாரணை வேண்டும்
மேற்குவங்க மாணவர் தலைவர் சுதீப்தே குப்தா கொலை குறித்து நீதி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. வலியுறுத்தி யுள்ளார்.
புதுதில்லியில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், மேற்குவங்க போலீ சாரின் அராஜகத்தை அனு மதிக்க முடியாது. அமைதி யான முறையில் போராட் டம் நடத்த அனைத்து மாநிலங்களிலும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கொல்கத்தாவில் மாணவர் கள் மீது தடியடி நடத்துவது, கைது செய்வது போன்ற செயல்களில் போலீசார் ஈடு படுகின்றனர். பேருந்தி லிருந்து தவறிவிழுந்ததில் தான் சுதீப்தே குப்தா இறந் தார் என்று போலீசார் கூறு வதை ஏற்க முடியாது. அவர் போலீஸ் காவலில் அடித் துக் கொல்லப்பட்டுள்ளார்.
எனவே இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேற்குவங்க மாநில இடதுமுன்னணி தலைவர் களும் இந்த கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர்.
மனித உரிமை ஆணையம்
இதனிடையே, இந்திய மாணவர் சங்கத் தலைவர் போலீஸ் காவலில் அடித் துக் கொலை செய்யப்பட் டது குறித்து மேற்குவங்க மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த துவங்கியுள்ளது. இது மிகவும் மோசமான விஷயம். மாணவரின் சாவு குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தருமாறு காவல் துறை ஆணையரை கேட் டுக்கொண்டுள்ளோம் என்று ஆணையத்தின் தலைவர் நீதிபதி அசோக் கங்குலி கூறினார்.
இது தவிர மனித உரிமை ஆணையம் தனியாக இது குறித்து விசாரணை நடத் தும் என்றார் அவர்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக