Home » » விபத்தல்ல... கொலை...

    விபத்தல்ல... கொலை...

    Written By Sadhikcdm on செப்டம்பர் 06, 2012 | 3:18 AM

    விபத்து அல்ல கொலை


    தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வண்ண வண்ண மத்தாப்புகள் பூத்துச் சிரிக் கின்றன. வாண வெடிகள் மக்களிடம் மகிழ்ச்சி யை உருவாக்குகின்றன. ஆனால் அதை உற் பத்தி செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பட்டாசுகளை தயாரிக் கின்றனர்.

    தமிழகத்தின்முக்கியமானபட்டாசுத்தயாரிப்பு மையமான சிவகாசியிலிருந்து வரும் தகவல்கள் இதயத்தைப் பிளப்பதாக உள்ளன. புதனன்று சிவகாசி முதலிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பலியானவர்கள் விபரம்முழுமையாகத் தெரியவரவில்லை என்றாலும், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் இன்னமும் முழுமையாக மீட்கப்படவில்லை. படுகாயமடைந்தவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு என்று தெரியவில்லை.

    வழக்கம்போல மாநில அரசு உயிரிழந்த வர் கள் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையும், காய மடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகையும் அறி வித்துள்ளது. ஒவ்வொருமுறை விபத்து நடை பெறும்போதும் இத்தகைய அறிவிப்புகள் வெறும் சடங்கு சம்பிரதாயமாக மாறிவிடுகின்றன.

    விபத்து நடந்த ஓம்சக்தி பட்டாசு ஆலையில் மட்டுமின்றி சிவகாசி பகுதியில் இயங்கி வரும் பெரும்பாலான பட்டாசு மற்றும் தீப்பெட்டிஆலை களில் தொழிலாளர்களுக்கு எவ்விதமான பாது காப்பும் இல்லை என்பது ஊரறிந்த, உலகறிந்த ரகசியம்.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு நடைமுறைகள் கூடப்பின்பற்றப்படுவதில்லை. இதையெல்லாம் பார்வையிடுவதற்கு அதி காரிகள் உள்ளனர். ஆனால் இந்தியாவின் மிகப் பெரும் சாபக்கேடாக மாறிப்போயுள்ள ஊழல் மற்றும் லஞ்சம் அதிகாரிகளின் கண்களை, வாயை அடைத்துவிடுகிறது. லாபம் என்பதைத் தாண்டி கொள்ளை லாபத்தை குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகள், தொழிலாளர்களின் உயிர்களைத் துச்சமாக மதித்து மரண விளையாட்டு விளையாடி வருகின்றனர்.

    சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டபோது எத்த கைய பாதுகாப்பு விதிமுறைகள் இருந்ததோ அதுதான் இப்போதும் தொடர்கிறது. நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக இறக்குமதி செய்யும் முதலாளிகள், வெளிநாடுகளில் பின் பற்றப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கிஞ்சிற்றும் கவலைகொள்வதில்லை.

    அபாயகரமான ரசாயனம் மற்றும் வெடி பொருட்களை இருப்பு வைப்பதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. எளிதாகத் தீப்பற்றக்கூடிய இடங்களில்தான் தொழி லாளர்கள் வேலைவாங்கப்படுகின்றனர். விபத்து ஏற்படுமானால் உயிரிழப்பைத் தடுக்கக்கூட வழியில்லாத வகையில்தான் பெரும்பாலான ஆலைகள் கட்டப்பட்டுள்ளன.

    சிவகாசி பகுதியில் ஒவ்வொரு முறை விபத்து நடைபெறும்போதும் அரசுத் தரப்பில் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகும். விபத்தைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது லஞ்ச தாகத்தை தணித்துக் கொள்வதன்றி கண்ட பலன் ஏதுமில்லை என்பதுதான் நடை முறை அனுபவமாக உள்ளது.

    விபத்துகள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் சிவகாசி போன்ற பகுதியில் நடை பெறுவது தவிர்க்க முடியாத விபத்து என்று ஒதுக்கிவிட முடியாது. தொழிலாளர்களின் உயிர் களை துச்சமாக மதிக்கும் முதலாளித்துவ நடை முறையின் கோர முகத்தினால் நடத்தப்படும் கொலைகள்தான் இந்த விபத்துகள்.

    மத்தாப்புச் சாம்பலாக, பட்டாசுக் காகிதமாக வெடித்துச் சிதறும் தொழிலாளர்களை பாதுகாக்க இனியாவது, ஏதாவது செய்யுமா அரசு?
                         
          


                                                                                             நன்றி;தீக்கதிர்




    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .