Home » » நீரின்றி அமையாது உலகு....!

    நீரின்றி அமையாது உலகு....!

    Written By Sadhikcdm on ஏப்ரல் 14, 2013 | PM 11:21

    தேசிய மட்டத்தில் உலகம் முழுவதும் தண்ணீரின் சேமிப்பு அளவு நாளாந்தம் குறைந்து செல்வதினால் 2018 ஆம் ஆண்டளவில் தண்ணீர் அடியோடு வற்றிப் போகலாம்.


    அதேநேரம் உலக சனத்தொகையில் அரைப்பகுதி குடி மக்கள் வாழும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் குடி தண்ணீர் இன்மையினால் வெகுவாக பாதிப்படையவும் கூடும். அப்படி இல்லாவிட்டால் உலக நாடுகளுக்கிடையில் நீரினால் ஓர் உலகப் போர் ஏற்படவும் வாய்ப்புண்டு.

    பயங்கரவாதிகளையும் கண்ணி வெடிகளையும், விட நீர் நிலையங்களில் நீர் குறைந்து போவது சர்வதேச பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் நீரை மையமாக வைத்து மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்கள் பல :

    1. இந்தியா, பாகிஸ்தான் இந்தி நதி விவகாரம்

    2. இந்திய பாங்களாதேஷ் கங்கை நீர் விநியோகம்

    3.ஜோர்தான் ஆற்று நீருக்கான  இஸ்ரவேல் ஜோர்தான் போராட்டம்

    4. நைல் நதி நீருக்கான எகிப்து சூடான் போர்

    5. இந்திய மத்திய அரசு தமிழ் நாடு மாநில அரசு இடையேயான காவேரி ஆற்று நீர் பிரச்சினை.

    இப்படியான ஓர் பயங்கரமான முன் எச்சரிக்கையானது. நாட்டை ஆளுவோரையும் குடிமக்களையும் அச்சமடையச் செய்ததாகத் தெரியவில்லை. தண்ணீருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு கோடிக்கணக்கான கலன் நீர் வீணாவதையும் குறைந்துள்ளது.

    பொதுமக்கள் நீரைச் சேகரிப்பதிலும், பாவித்த நீரைச் சுத்திகரித்து திரும்ப பாவிப்பதிலும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். துரதிஷ்டவசமாக பல நாடுகளில் தண்ணீரின் தரம் குறைந்து பழுதடைந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். 90 வீதத்துக்கு மேலான ஆபத்தை விளைவிக்கும் வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற விபரீத சம்பவங்கள் நீரின் மூலமாகத் தான் நடைபெறுகின்றன.

    அத்துடன் இந்தச் சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. தரமற்ற காணிப்பாவனை காடு அழிப்புகள், மிருகங்களின் மேலதிகமான மேய்ச்சல்கள், நிலைத்து நிற்கமுடியாத புதிய நீர்ப்பாசன திட்டங்கள், மண் அகழ்வுகள் போன்றனவும் இவற்றுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளன.

    நீரின்றி உலகத்தில் எந்த ஜீவனும் வாழ முடியாது. இன்றிலிருந்து 30 வருடங்களுக்குள் உலக உணவுத் தேவை தற்போது இருப்பதை விட 55 (வீதம் மேலதிகமான நீர்ப்பாசன வசதிகளும் தேவைப்படும்.

    உலக நீர் வளத்தில் 97 வீதம் பயன்படுத்த முடியாத உவர் நீராகும். மிகுதி 3 வீதத்தில் 0.003 வீதமே மனிதர்களின் பாவனைக்கு கிடைக்கின்றது. இதைத்தான் 700 கோடிக்கு மேற்பட்ட மக்களும் உயிரினங்களும் பயன்படுத்துகின்றன.

    இன்னும் 90 ஆண்டுகளில் கடல் நீரின் மட்டம் அதாவது 2100  ஆம் ஆண்டில் இரண்டு மீற்றர் உயரும் என பீஜிங்கில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த நிலையில் பல நாடுகள் கடலுக்குள் சென்றுவிடும். குடிப்பதற்கு நல்ல தண்ணீரும் கிடைக்காது.  நதிகளையும், நீர்  வீழ்ச்சிகளையும் கொண்ட எமது நாட்டில் பெரும் அளவான நீர் பாவனைக்கு உதவாது வீணாகக் கடலைச் சென்றடைகிறது.

    இலங்கையில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு உபயோமாகும் நீரின் அளவு 13 கன மீற்றர்களாகும். எமது நாடு ஒரு விவசாய நாடு. இதன் முக்கிய தேவைகளில் ஒன்று தான் நீர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் வருடாந்தம் 108 ஆயிரம் கன கிலோ  மீற்றர் மழை பெய்கிறது.

    இதில் 60 வீதம் அதாவது 61 ஆயிரம் கன மீற்றர் ஆவியாகி மீளவும் நீர்மட்டத்துடன் சேர்கின்றது. எஞ்சிய 47 ஆயிரம் கன மீற்றர் நீர் கடலை அடைகிறது. அதாவது ஏறத்தாழ ஒரு இலட்சம் கன மீற்றர் நீர் மட்டும் ஆறுகள், ஏரிகள் போன்றவற்றின் மூலம் பயன்படுத்தக்கூடிய நீராக உள்ளது. இந்த நூற்றாண்டில் நீருக்கான தேவை
    தற்போது இருப்பதைவிட 6 மடங்கு மேலதிகமாக தேவைப்படுகின்றது.

    இது இரட்டிப்பான சனத்தொகை வளர்ச்சியை ஈடுசெய்வதற்காகும். அதிகூடிய நீர் விவசாயத்துக்கும் அதற்கடுத்ததாக கைத்தொழிலுக்கும் மிகுதி குடிமக்களின் வீட்டுத் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது. வீடுகள், தொழிற்சாலைகள் இவற்றில் பயன்படுத்தப்படும் நீரை மீண்டும் சுத்திகரித்து திரும்பவும் பயன்படுத்த முடியும்.

    எதிர்வரும் 10 வருடங்களுக்குள் நீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும். அது எப்படியென்றால் புவி வெப்பமடையவதினால் ஆற்று நீர் வற்றிப் போகும். கிணறுகள் வற்றிப் போகும். உவர்த்தன்மை அதிகரிக்கும், மீன் வளங்கள், கடல் தாவரங்களும் அழிந்து போகும். கடல் நீர் அதிகரிப்பினால் வெள்ளம் ஏற்படும்.

    இதனால் பல நாடுகள் பயங்கரத்துக்குள்ளாகும். உலக சனத்தொகையில் ஐந்தில் இரண்டு பகுதி மக்கள் கடல் வெள்ளத்தால் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் வாழ்கிறார்கள். இப்படியாக பாதிப்படையக்கூடிய நாடுகளில் இந்தியா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கும்.

    பரந்த அளவில் விவசாயக் காணிகளில்  ஏற்படும் நஷ்டம் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். மீன்பிடித் தொழில்  பாதிப்படையும். நாட்டுக்கு நாடு நீர் முகாமைத்துவ வளர்ச்சி முறையில் வித்தியாசம் உண்டு. அவை பின்வருமாறு:

    1.நீர் வளங்களின் தேவையை அளவிடும் பிரமாணம்

    2.நீருக்குக் கொடுக்கும் விலையை மதிப்பீடு செய்யும் முறைமை

    3. நீர்த் தேவையையும் அதற்கேற்ப வளமான சுத்த நீரின் கன அளவும்

    அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் முன்னேற்றம் அடைய நீர் முகாமைத்துவத்துக்கும், அபிவிருத்திக்கும் தேவையான புதிய முதலீடுகள் தேவை. அவை சுற்றாடலையும் சமூகத்தையும் பாதுகாக்கத் தேவைப்படும் நீரைப்  பெறுவதற்குரிய சம நிலையை நீண்ட காலத்துக்கு பாதுகாக்கக் கூடிய ஸ்திரத் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது உலக வங்கியின் வேண்டுகோளாகும்.

    கிராம அபிவிருத்திக்கு தேவையான நீர் விநியோக செயற்றிட்டத்தை ஆரம்பித்தால் மட்டும் போதாது. ஆனாலும் அதிலும் முக்கியம், அதற்கு தேவையான நீர் ஆதாரங்களை இனங்கண்டு அதைச் சரியான முறையில் முகாமை செய்து அதைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தல் ஆகும்.

    தண்ணீரை உற்பத்தி செய்து அதை விநியோகிக்கும் முதலீடுகள் நல்ல பலன் தரக் கூடிய முறையில் திட்டமிடல் அடிப்படையில் பகிரப்படல் வேண்டும். அத்துடன் நீர் விநியோகத்துக்கு முதலீடு செய்வதற்கு ஒரு நிரந்தரமான தள அமைப்புத் தேவை வறுமையை ஒழிப்பதில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பணக் கஷ்ரங்களை அனுபவிக்கின்றன.

    இதனால் சிறந்த நீர் வளங்களை உற்பத்தி  செய்ய முடியவில்லை. ஆனால் சிறந்த நீர்  வளங்கள் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கூட்டி மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண வாய்ப்பளிக்கும். அது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

    உண்மையான வளர்ச்சிக்கு இது தான் முக்கிய சவாலாக அமைகின்றது. சம்பந்தப்பட்ட அனைவரும் புதிய புதிய திட்டங்களையும் சவால்களையும் ஏற்கவேண்டுமெனின், சரியான நீர் வழங்கும் கட்டமைப்பும் சிறந்த முகாமைத்துவமும் நீர் விநியோகத்தினாலும் ஏற்படும் தடைகளை அகற்றி பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் மேலும் விருத்தியடைய ஒரு தூண்டு சக்தியாக அமையும்.

    விவசாயம் சம்பந்தப்பட்ட வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் நான்கு விதமான கட்டுமான அமைப்புக்களும், முகாமைத்துவ  முறைகளும் உண்டு. வளர்ந்து வரும் நாடுகளில்  இவை வறுமையை குறைக்க உதவிசெய்ய முடியுமென  நம்பப்படுகின்றது.

    1. நீர் பாயும் ஆறுகளின் பரந்த அளவிலான சட்ட நுணுக்கங்களும் ஏழைகள் உட்பட்ட அனைவருக்கும் நன்மை பயக்கும்.

    2.வாடிக்கையாளர்கள் தண்ணீரைப் பயன்படுத்தும் முறைகளை இலகுபடுத்தி நன்மையடையச் செய்தல்

    3. குடிநீர் விநியோகம் மற்றும் நீர்ப்பாசன சேவைகள் இல்லாத ஏழைகளுக்கு மேற்படி திட்டங்கள் ஆரோக்கியமான சுகாதார வசதிகளையும், நீர் விநியோகத்தையும் உறுதிப்படுத்தும். வறுமையை அகற்றும் நோக்கமாக, தண்ணீர் குன்றிய பிரதேசங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் முறையை ஏற்படுத்தல்

    மேலும் எதிர்கால நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய நீர் வளங்களைக் கண்டுபிடித்து அவற்றை விருத்தி செய்தல் வேண்டும். அதற்கு அடுத்தாக ஏற்கனவே காணப்படும் நீர் வளங்களை பேணிக்காக்க வேண்டும். விவசாயத்தைப் பொறுத்தவரையில் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் மூலம் 50 விதமான தண்ணீர் வீணாகிறது.

    இதனால் சொட்டு நீர்ப்பாசன முறைகளைப் பயன்டுத்தலாம். நெல்லை மட்டும் பயிர் செய்யாது மற்றைய போகங்களில் தானியப் பயிர்களைச் செய்கை பண்ணலாம். இதனால் மிகுதியான நீரை மிச்சப்படுத்தலாம் மேலதிகமாக வழிந்தோடும் நீரையும், கடலுக்கு சென்று வீணாகும் நீரையும் அணைக்கட்டுக்கள் மூலம் சேமிக்கலாம்.

    உலக சனத்தொகையில் சுமார் 120 கோடி மக்களால் சுத்தமான தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதுடன் அமெரிக்க சஞ்சிகையொன்றின் ஆய்வின் படி, உலக சனத் தொகையில் 40 வீதமானோர் தூய்மையான நீரின்றி சிரமப்படுவார்கள் எனத் தெரிய வருகிறது.

    மேலும் மாசடைந்த நீர் விநியோகத்தினால் மலேரியா வயிற்றோட்டம் போன்ற  நோய்கள் அதிகரிக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இந்த நோய்களால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களில் அநேகமானோர் 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் ஆவார்கள். சுத்தமான நீர் விநியோகத்தினால் இவர்களைக் காப்பற்ற முடியும். உலகெங்கும் இருவகையான தண்ணீர் உள்ளது. கடல் சமுத்திரம் என்பவற்றில் உப்பு நீராகவும், ஆறு, குளம் என்பவற்றில் நன்னீராகவும் காணப்படுகின்றது. நன்னீரையும் இரண்டு வகையாக  பிரிக்கின்றனர்.

    ஒன்று கடின நீர், மற்றது மிருதுவான நீர் என்பதாகும் மக்னிசியம், கல்சியம் (காபனைட்) சல்பைட் உள்ள நீரைப்  பரிகினாலும் பலவிதமான நோய்களினால் பாதிப்படைய  வேண்டிவரும். ஆகவே நீரைச் சுத்தமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
    நன்றி.................................
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .