அதிபர் மகிந்த ராஜபக்சே கடந்த வாரம் புதுதில்லி வருகை தந் தது, இந்தியா - இலங்கை இடையி லான உறவுகள் தொடர்பாக இருந்து வந்த சந்தேகங்கள் பல களையப்பட உதவி இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதி ரான தீர்மானத்தை இந்தியா ஆதரித் ததிலிருந்து, கொழும்பு ஒருவித மான நம்பிக்கையற்ற உணர்வுட னேயே இந்தியாவுடன் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் நிலவும் கட்சி களுக்கிடையிலான போட்டி அரசி யலில், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆவேசமான நிலையினை எடுத்து வருகின்றனர். இது இந்தியாவிற்கு எதிராக பாது காப்பற்ற உணர்வினை கொழும்பு விற்கு ஏற்படுத்தி இருக்கிறது. மத் தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி யில் நிறுவப்படவுள்ள சர்வதேச புத்தர் பல்கலைக் கழகத்தின் திறப்புவிழா நிகழ்ச்சிகளில் பங் கேற்க வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, தில்லியில் சிறிது நேரம் தங்கி இருந்தது இரு நாடு களின் இடையே உறவுகளை மறு படியும் புதுப்பித்துக் கொள்ள ஒரு சரியான வாய்ப்பை அளித்தது. கடந்த இருபதாண்டுகளில், இரு தரப்பிலும் நட்புரீதியான உறவுகள் வெற்றிகரமாக வலுப்படுத்தப் பட்டன. அதன்மூலம் இரு நாடு களின் பொருளாதார உறவுகளும் விரிவடைந்தன. உலக அளவில் இந்தியா, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். அதே போன்று, தெற்காசியாவில், இலங் கை, இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுலா, மத ரீதியான, விளையாட்டு ரீதியான மற்றும் கல்வி ரீதியான தொடர்பு களும் தழைத்தோங்கி வளர்ந்து கொண்டிருந்தன. எல்டிடிஇ-யினரைத் தோற்கடித்திட இலங்கை ராணு வத்திற்கு இந்தியா ராஜதந்திர ரீதியில் பங்களிப்பினைச் செய்தது. ராஜபக்சே அரசாங்கம் சிங்களர் வெற்றியை அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண் பதற்குப் பதிலாக, தமிழ்மக்கள் மீது சிங்களர்களின் வெற்றி ஆதிக்கம் செலுத்த அனுமதித்து வருகிறது என்பதில் எவ்வித ஒளிவுமறைவும் கிடையாது. இலங்கை அமைதியாக வும், ஒன்றுபட்டும் இருக்க வேண் டும் என்பதில்தான் இந்தியா உறுதி பூண்டிருக்கிறது. இதற்கு தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப் பட வேண்டியது அவசியமாகும். இதனை விடுத்து ‘‘தமிழ்நாட்டு அரசியலு’’க்கு புதுதில்லி ஆர்வம் காட்டுவதாகக் கூறுவது எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள மறுப்ப தாகும். அதேபோன்று ‘சீனாவைக் காட்டி’ அல்லது ‘பாகிஸ்தானைக் காட்டி’ இந்தியாவைப் பயமுறுத்து வதும் இந்தியா இதன் மீது காட் டிடும் முக்கியத்துவத்தை மாற்றி விடாது.
இலங்கைத் தமிழர் பிரச்ச னைக்கு ஓர் அரசியல் தீர்வு காண் பதற்கான ஒரு திட்டத்தை இறுதிப் படுத்த வேண்டியதன் அவசரத்தை அதிபர் ராஜபக்சேயிடம் இந்தியா, இருநாட்டின் பாதுகாப்பு நலன் களை கணக்கில் எடுத்துக் கொண்டு, வலியுறுத்தி இருக்கிறது. இது காலங்கடந்த ஒன்று என்ற போதிலும், இப்போது மிகவும் சரியாக வலியுறுத்திக் கூறப்பட்டி ருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற் கும் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இதுவரை உருப்படியான பலனைத் தந்திடவில்லை. தமிழ் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் இணைவதற்கு நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்கு முன் இருந்த அனைத்துக் குழுக்களின் உழைப்பும் வீணாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பின்னணியில், தமிழர் களின் நம்பிக்கையைப் பெறக் கூடிய விதத்தில் நடவடிக்கை களை எடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இலங்கை அரசாங் கத்திற்கு இருக்கிறது. வட மாகா ணத்தில் தேர்தலை நடத்துவது இதற்காக எடுத்து வைக்கப்படும் மிக முக்கியமான முதல் அடியாகும். தேர்தலுக்காக எவ்வளவு சீக்கிரம் தேதி அறிவிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு இரு தரப்பினருக்கும் இடையே சமரச இணக்கம் காண் பதற்கான பாதை எளிதாகும்.
(தி இந்து:28.09.12தலையங்கம்)
தமிழில்: ச. வீரமணி
நன்றி : தீக்கதிர்
தொடர்புடைய பதிவுகள் :
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக