Home » » பயங்கரவாதிகளைவிட பயங்கரமானவர்கள்

    பயங்கரவாதிகளைவிட பயங்கரமானவர்கள்

    Written By Sadhikcdm on ஜனவரி 09, 2012 | 6:44 AM


    கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் சிந் தாகி என்ற சிறுநகரில் அமைந்துள்ள வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் ஆங்கில புத் தாண்டு தினத்தன்று பாகிஸ்தான் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் வழக்கம்போல இதை பெரும் செய் தியாக ஊதித் தள்ளின. ஆர்எஸ்எஸ், பாஜக பரி வாரங்கள் களத்தில் இறங்கி இந்த செயலில் ஈடு பட்ட தேசத் துரோகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பந்த் உட்பட பல கட்டப் போராட்டம் நடத்தின.

    கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழு வதும் இது ஒரு பரபரப்பான செய்தியாக மாற்றப் பட்டு, பதற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இப்

    போது இந்தச் சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்கிற உண்மை வெளியே வந்துவிட்டது. பந்த் போராட்டம் நடத்திய, தேச பக்தி குறித்து வாய்கிழிய கூச்சலிட்ட ஆர்எஸ்எஸ், பாஜக பரி வாரத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த காலித் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீராமசேனா என்ற அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். கர்நாடகத்தை ஆண்டுகொண்டிருப்பது பாஜக அரசுதான். எனவே, அவர்கள் இது எதிர்க் கட்சி அரசின் சதி என்று கதைகட்ட முடியாது.

    ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை பயங்கரவாத அமைப்பு என்று கூறினால் அவர்களுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. ஆத்திரத்தில் சாமி யாடுகிறார்கள். இப்போது ரத்தக்களறி ஏற்படுத் துவதற்காக, சிறுபான்மை சமூக மக்களை நர வேட்டையாடுவதற்காக அவர்களே இந்த கேடு கெட்ட வேலையில் இறங்கியுள்ளனர். இவர் களை என்ன சொல்வது? பயங்கரவாதிகளுக்கே பாடம் நடத்தக்கூடிய பயிற்சிப் பட்டறையாக அல்லவா பாஜக கூட்டம் விளங்குகிறது.

    இது முதன்முறையல்ல, தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்வதற்கு முன்பு, கொடி யவன் நாதுராம் கோட்சே சுன்னத் செய்து கொண்டதோடு தனது பெயரையும் இஸ்மாயில் என்று மாற்றிக்கொண்டான் என வரலாறு பேசு கிறது. காந்தியைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என கதைகட்டி சிறுபான்மை மக்களை வேட்டையாடுவதுதான் அவர்களது திட்டமாக இருந்தது.

    அஜ்மீர் தர்ஹாவில் குண்டுவைத்ததும், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத் ததும், 2008-ம் ஆண்டு மாலேகாவ் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களும், மெக்கா மசூதியில் குண்டுவைத்தவர்களும் சாட்சாத் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தினர்தான்.

    தமிழ்நாட்டில் தென்காசி நகரில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டுவைத்துவிட்டதாக ரகளையில் ஈடுபட் டனர் ஆர்எஸ்எஸ்காரர்கள். ஆனால், அவர்க ளாகவே வைத்துக்கொண்ட குண்டுதான் அது என்பது விசாரணையில் வெளிவந்தது.

    இந்தப் பின்னணியில்தான் கர்நாடக மாநிலத் தில் பாகிஸ்தான் கொடியை இவர்களே ஏற்றி விட்டு கலவரத்திற்கு கால்கோள்விழா நடத்தி யுள்ளனர். கர்நாடக மாநில பாஜக அரசு ஊழலில் சிக்கித் தவிக்கிறது. இந்த மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி ராஜி னாமா செய்துள்ளார். மக்கள் இந்த அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதை திசை திருப்ப இந்த நாடகத்தை இவர்கள் நடத்தியிருக் கக்கூடும். தேசபக்தி குறித்துப் பேச சற்றும் தகுதியில்லாதவர்கள் வலதுசாரி பயங்கர வாதிகளான ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர்.
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .