Home » » தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை: ஒரு பார்வை

    தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை: ஒரு பார்வை

    Written By Sadhikcdm on ஆகஸ்ட் 14, 2011 | AM 2:23

                                                                    தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிமுக தலைமை தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் இறங்குவது வரவேற்கத்தக்கது தான். ஆனால் ஒரு மாநில அரசின் நிதி நிலை அறிக்கை அத்தகைய முயற்சிகளோடு நின்று விட முடியாது. மாநிலத்தில் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக் கான தொலைநோக்கும், அதோடு கூடிய திட் டங்களும் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றாக வேண்டும். தமிழக நிதியமைச்சர் 4-8-2011 அன்று சமர்ப்பித்த பட்ஜெட் பல அம் சங்களில் அந்த வகையில் அமையவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

    மத்திய - மாநில வருவாய் பகிர்வு

    14வது சட்டமன்றத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்திய தமிழக ஆளுநர் தனது உரையில் 17வது பத்தியில் ‘இந்த (அதிமுக) அரசு மத்திய அரசுடன் சுமூகமான போக்கைக் கடைப்பிடிக்கும். ஆனால் தனது உரிமையை சமரசம் செய்து கொள்ளாது’ என்று கூறுகிறார். தமிழகத்தின் கடன் சுமை 1,18,000 கோடி ரூபாய் என்று சொல்கிற நிதி நிலை அறிக்கை, வரிவருவாய் பகிர்வில் மத் திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண் டிய நிதியை அளிக்காதது பற்றி குறிப்பிடப் படவில்லை. “வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினத்தில் பெரும்பகுதியை மாநில அரசுகளே ஏற்கின்றன. ஆனால் வரிவருவா யில் மாநிலங்களுக்கான பகிர்வோ 30 சத விகிதத்திற்கும் கீழ்தான்” என்கிறது ஒரு புள்ளிவிவரம். எனவே தான் மார்க்சிஸ்ட் கட்சி 13வது நிதிக்குழுவிற்கு அளித்த தனது ஆலோசனையில், ‘வரிவருவாய் பகிர்வில் மாநிலங்களின் பங்கு தற்போது 33.33 சத விகிதத்தில் தொடங்கி காலப்போக்கில் 50 சத விகிதமாக அமைய வேண்டுமென்று சொல் லியிருக்கிறது.

    ‘கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அகில இந்திய வளர்ச் சியை விட குறைவாகவே இருந்துள்ளது. குறிப்பாக விவசாயத்துறையில் - 0.51 (மைனஸ் 0.51) வளர்ச்சியே எட்டியுள்ளது. நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு சேவைத் துறையில் மட்டுமல்லாது விவசாயத்துறையி லும் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சித் தேவை என்பதை இந்த அரசு புரிந்துள்ளது’ என்று மிகச்சரியாக கணிக்கிறது நிதிநிலை அறிக்கை. இந்த புரிதலோடு நிதி நிலை அறிக்கையில் விவசாயத்துறைக்கு அளிக்கப் பட்டுள்ள கவனமும் அழுத்தமும் உற்பத்தித் துறைக்குத் தரப்படவில்லை.

    விவசாயத்திற்கு கூடுதல் கவனம்

    கடந்த ஆண்டு 85.35 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத் தியை நடப்பு ஆண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தும் நோக்கத்துடன் விதை மானியத்திற்கு 85 கோடியும், தடையில்லாமல் உரம் கிடைத்திட 150 கோடியும், நுண்ணிய நீர்ப்பாசனத்திற்கு 100 சதவிகித மானியமும் வழங்கப்படும் என்கிறது நிதிநிலை அறிக் கை. ஏரிகள், குளங்களை சீரமைக்க 367 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது சரியானது. தமிழக நதிகள் இணைப்புக்கென 5,166 கோடி ரூபாய் மெகா திட்டத்திற்கான கருத்துரு மத்திய அரசிற்கு அனுப்பப்படும் என்றும் இத் திட்டப் பணியை உடனே தொடங்கிட 60 கோடி ரூபாய் நடப்பாண்டில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கிறது நிதி நிலை அறிக்கை. ரூ.369 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகிற தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு 2011-12ம் ஆண்டில் ரூ.90 கோடி ஒதுக்கப்படுகிறது. வரவேற்க வேண் டிய இந்த நல்ல அம்சங்களைச் சுட்டிக் காட்டுகிற போது குறைபாடுகள் சிலவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.

    கரும்பு, நெல் போன்ற வேளாண் விளை பொருட்களுக்குக்கான கூடுதல் கொள்முதல் விலைகளையும் அரசு அறிக்கையில் சொல் லியிருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசிடம் அளித்துள்ள பரிந்துரை களில், நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500-ம், கரும்புக்கு கொள்முதல் விலை யாக டன் ஒன்றுக்கு ரூ.3000ம் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளது. விவசாயத்திற்கு கூடுதல் கவனம் தேவை என்ற தன்னுடைய நிலைப்பாட்டிற்கு ஏற்ப தமிழக அரசு உடனடியாக இந்த கொள்முதல் விலைகளை அறிவிக்க வேண்டும்.

    அதைப்போல பயிர் பாதுகாப்புத் திட்டத் திற்கு (ஊசடியீ iளேரசயnஉந ளஉாநஅந) நிதி ஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. எண் டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்திற்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது குறித்தும் நிதிநிலை அறிக்கை மௌனம் சாதிக்கிறது.

    நிலச் சீர்திருத்த சட்டத்தில் உரிய திருத் தம் கொண்டு வந்து, கறாராக நடைமுறைப் படுத்தப்பட்டு, உபரி நிலங்களையும், தரிசு நிலங்களையும் நிலமற்ற விவசாயத் தொழி லாளர்களுக்கு விநியோகம் செய்திட வேண்டு மென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோச னையை ஏற்று தமிழக அரசு அதற்கான நட வடிக்கையில் இறங்க வேண்டும்.

    குடிமனை இல்லாத கிராமப்புற - நகர்ப்புற ஏழை மக்களுக்கு குடிமனை வழங்குவது குறித்து நிதி நிலை அறிக்கையில் ஏதுமில்லை.

    கடந்த ஆட்சியின் போது மனைப்பட்டா கோரி மனு செய்த 25 லட்சம் பேர்களில் ஒரு சிறு பகுதியினருக்கே மனைப்பட்டா வழங்கப் பட்டது. அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப் பட்டு குடிமனைப்பட்டா வழங்க உரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோவில் இடங்களில் குடியிருப்போர் மற்றும் கோவில் நிலங்களில் சாகுபடி செய்வோர் பிரச்ச னைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    ஆதிதிராவிடர் நலம் பேண

    தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான துணைத்திட்டத்திற்கு ரூ. 5007 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அது போல இலவச விடுதிகள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உணவு மானியத் தொகை (பள்ளி மாணவர்களுக்கு ரூ. 450-லிருந்து ரூ.650 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.550 லிருந்து ரூ. 750 ஆகவும்) உயர்த்தியிருப்பதும் பாராட்டுதலுக் குரியது. இருப்பினும் இத்தொகை போது மானதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

    ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மட்டும் 2,10,354 மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை 84,886 என்கிறது 2010-11ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான அரசின் கொள்கை குறிப்பு (ஞடிடiஉல nடிவந 2010-11). எனவே தேவைப்படும் அனைத்து ஆதிதிராவிடர் மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கும் வகையில் விடுதிக ளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இத்தரு ணத்தில், அரசு விடுதியில் மாணவர்களுக் கான மானியம் இரண்டு மடங்காக உயர்த்தப் படும் என்றும் தேவைக்கேற்ப விடுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் அதி முக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி யிருப்பதை நினைவுப்படுத்துகிறோம். இதைப்போலவே பிற்படுத்தப்பட்ட மாணவர் களின் தேவையை, பூர்த்தி செய்திட வேண்டும்.

    பொதுச் சுகாதாரம் -

    கூடுதல் நிதி தேவை

    தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகி தம் 1000 க்கு 28 என்ற அளவில் தேசிய சரா சரியை விட குறைவாக உள்ளதாக நிதிநிலை அறிக்கை சொல்கிறது. ஆனால் கேரளாவு டன் (12/1000) ஒப்பிடும்பொழுது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பதை சுட்டிக்காட்டு கிற அதே வேளையில், இப்பிரச்சனையில் நிதிநிலை அறிக்கையிலுள்ள சில நல்ல அம்சங்களும் உள்ளன. பிரசவ மானியம் ரூ. 6000த்திலிருந்து ரூ. 12000 ஆக உயர்வு, கிராமப்புற இளம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், தொலைதூர கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் ‘நடமாடும் மருத்துவ மனை’ திட்டம், ஆரம்ப சுகாதார மையங்கள் இல்லாத 75 சிறிய நகர்ப்புற ஊர்களில் ‘நகர்ப் புற ஆரம்ப சுகாதார மைய’ங்களை தொடங் குவது, புதிய பொது சுகாதார காப்பீடு திட்டம் போன்றவை வரவேற்கத்தக்க நல்ல அம்சங் கள். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கிணங்க பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற பொதுத்துறை காப்பீட்டு நிறு வனங்களையே பயன்படுத்த வேண்டும். 2011-12ம் ஆண்டில் 4761 கோடி ரூபாய் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே அளவில்தான் இவ்வாண்டும் பொதுச் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு மொத்த செலவினத்தில் 0.006 சதவிகிதம் அமைந்துள்ளது. எனவே இத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

    தேசிய கிராமப்புற நல்வாழ்வுத் திட்டத் தின் கீழ் 1000 மக்களுக்கு ஒரு சமூக நல் வாழ் வுப் பணி ஆர்வலர் ஹளுழஹ- (ஹஉஉசநனவைநன ளுடிஉயைட ழநயடவா ஹஉவiஎவைள) நியமிக்கலாம். தமிழகத்தின் கிராமப்புற மக்கள் தொகை 3 கோடிக்கு மேல் உள்ளனர். தற்போது தமிழகத்தில் 2000 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே திட்டத்தின் முழு பயனை பெறும் வகையில் தேவைப்படும் நல்வாழ்வு பணி ஆர்வலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

    சமூகப் பாதுகாப்பு நடவடிக்கை

    மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவிகிதம் ஒதுக்கீடு, உலமாக் கள், ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோருக் கான உதவித் தொகை அதிகரிப்பு, திருநங் கை நலத்திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு, இலங்கை அகதிகளுக்கான உதவிப் பணத் தொகை அதிகரிப்பு, மீனவர் களுக்கு விசைப்படகு வாங்க மானியத்துடன் நிதியுதவி, மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கான நிதியுதவி ரூ. 1000த்திலி ருந்து ரூ. 2000மாக உயர்வு போன்ற சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கவைகள்.

    சமச்சீர்கல்வி அதன்

    முழு அர்த்தத்தோடு

    பொதுப்பாடத்திட்டத்தை வலியுறுத்தி உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின் புலத்தில் சமச்சீர் கல்வி என்பது பொதுப் பாடத்தோடு, கட்டமைப்பு வசதிகள், சரியான மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம், ஆசிரியர் நியமனம் போன்றவை உள்ளிட்ட பொதுப் பள்ளிக் கல்வித் திட்டம் எனும் பொருளில் அமலாக்கிட வேண்டும். இதற்குத் தேவை யான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தனியார் சுயநிதிப் பள்ளி -கல்லூரிகளில் அரசு தீர்மானித்துள்ள கல்விக்கட்டணம் பற்றி அறிவிப்பில் ஏதும் இல்லை. அரசு அமைத்த குழு தீர்மானித்த கல்விக்கட் டணத்தை மட்டுமே வசூலிப்பதை உத்தரவா தப்படுத்திட வேண்டும். பள்ளிக் கல்விக்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் சுமார் 2 சதவிகிதம்தான் (மொத்த செலவினத்தில்) நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட 0.2 சதவிகிதம் தான் கூடுதலாக உள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்துள்ள நிலையில் இந்த கூடுதல் என்பதே அர்த்தமற்றதாக உள்ளது.

    நடப்பு ஆண்டில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்குவது, ஒரு அரசு பொறி யியல் கல்லூரி, ஒரு தேசிய சட்டப்பள்ளி, இரண்டு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் துவங்குவது, உயர்கல்வியை மேம்படுத்த உதவி செய்யும்.

    மத்திய அரசு நவீன தாராளமயக் கொள்கை யை குறிப்பாக உயர்கல்வியில் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறது. அதன் விளை வாக உயர்கல்வியில் அந்நிய தலையீட்டை அனுமதிக்கும் சட்டம் மற்றும் உயர்கல்வி குறித்த அதிகாரங்களை மையப்படுத்தும் சட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்து. இது குறித்த தன் நிலைபாட் டை, மாநில உரிமையை உறுதிப்படுத்தும் நிலைபாட்டை தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் தெரிவித்திருக்க வேண்டும்.

    கல்வி, குறிப்பாக உயர்கல்வி வணிகமய மாகி வருவதை தடுத்திட அரசின் வலுவான தலையீடும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீது தேவையான சமூகக் கட்டுப்பாட்டை உருவாக்குவதும் தேவை.

    தொழில்துறையில் தொலைநோக்குத் திட்டம் தேவை

    நிதி நிலை அறிக்கை, ஜப்பான், கொரியா, தாய்லாந்து நாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் ரூ.21500 கோடி முதலீட்டில் 22 புதிய தொழில்கள் குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கிறது. இதற்கென தனியாக தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும், புதிய தொழிற்கொள்கை - 2011, புதிய நிலம் எடுக்கும் கொள்கை, புதிய நிலவங்கி ஆகியவை அறிவிக்கப்படும் என்கிறது நிதிநிலை அறிக்கை.

    “புதிய தொழிற்கொள்கை-2011 பற்றிய நகல் அறிக்கையின் மீது பொது விவாதத் திற்கு வாய்ப்பளித்து பிறகு இறுதிப்படுத்திட வேண்டும். அக்கொள்கையில் வேலைவாய்ப் புக்கும், மாநிலம் முழுவதும் சீரான வளர்ச் சிக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டு மென்ற” தனது ஆலோசனையை மார்க் சிஸ்ட் கட்சி ஏற்கனவே தமிழக அரசிடம் முன்மொழிந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் முதலீடுகளை வரவேற்கலாம். அதே சமயம் தொழிலாளர் களின் ஜனநாயக உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தென் தமிழகத்தில் டைட்டானியம் தனிமம் கொண்ட கனிம வளம் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோன்ற கனிம வளங்களை எடுக்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கலாம். அதன் மூலம் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஆயிரக் கணக்கான வேலை வாய்ப்புக்களை உரு வாக்க முடியும். அத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் தமிழக தொழில் வளர்ச் சிக்கான நீண்ட காலத் திட்டம் எதுவும் இந்த நிலை அறிக்கையில் காணப்படவில்லை.

    ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஏற்றிடுக!

    மொத்தத்தில் அதிமுக அரசினுடைய 2011-12ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக் கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உள் ளன. அறிக்கை குறித்த பொது விவாதத்தின் போதும், அதைத் தொடர்ந்து நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போதும் இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்க ளும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் முன் வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை களை ஏற்று நிதிநிலை அறிக்கையை மேலும் செழுமைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .