தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ள கல்விக்கட்டண விபரம், பள்ளிகளை திறப்பதற்கு முன்பு வெளியிடப்படும் என்று கல்விக் கட்டண நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து 6 ஆயிரத்து 400 பள்ளி கள் மேல்முறையீடு செய்தன. இந்த மனுக்களை நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு 2010 நவம்பர் முதல் 2011 ஏப்ரல் வரை விசாரித்தது. பள்ளிகளின் மேல்முறையீடு அடிப் படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் கட்டண நிர்ணய அறிவிப்பு இருக்கும் என்று குழு கூறியுள்ளது. ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணமே மிகவும் அதிகம் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் நடைமுறையில் பெரும்பா லான பள்ளிகள் இந்தக் கட்டணத்தைவிட பல்வேறு பெயர்களில் கூடுதலாக வசூலித்தன என்பதே உண்மை. அதிலும் பல பள்ளிகள் தற்போது 12வது மற்றும் 10வது படித்து வெளியேறும் மாணவர்களி டம் அநியாயமாக கட்டணத்தை வசூலித்துள் ளன. அந்தத் தொகையை செலுத்த முடியாத மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க முடியாது என்று அடாவடி செய்ததும், அதை எதிர்த்து சில பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததும் நடந்தது. இந்த நிலையில் சமச்சீர் கல்வி அமலாக்கம் இந்த ஆண்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்து, ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக் கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஏற்கெனவே பல பள்ளிகள் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலான தொகையை வசூலிக்கத் துவங்கியுள்ளன. அதிலும் சமச்சீர் கல்வி இந்த ஆண்டு இல்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஊக்கமடைந்துள்ள மெட்ரிக்குலேசன் பள்ளி முதலாளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கட்ட ணத்தை வசூலித்து வருகின்றனர். கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்ட ணத்தை விட கூடுதலாக வசூலித்த பள்ளிகள் மீது முந்தைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் எந்தத்தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணம் நிர்ணயிக்கப் படும் என்பதைவிட பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள் ளைக்கு கடிவாளமிடவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. கோவிந்தராஜன் குழு, ரவிராஜ பாண்டியன் குழு போன்றவை அந்த அடிப் படையில்தான் அமைக்கப்பட்டன. நியாயமான கட்டணத்தை நிர்ணயிப்பதும், அதை மீறும் பள்ளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுப் பதும் அவசியமாகும். முந்தைய காலத்தில் சாதியின் பெயரால் பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்போது பணத்தின் பெயரால் கல்வி மறுக்கப் படும் நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் தலையாயக் கடமை யாகும். |
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக