விக்கிலீக்ஸ் - இந்து ஏடு வெளியிட்டு வரும் பல்வேறு தகவல்கள் தேசத்தை அதிர்ச்சிய டையச் செய்வதாக உள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் மு.க.அழகிரி முன்னேற் பாடில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டதையும், நாடாளுமன்றத் தேர்தலின் போது சிவகங்கையில் வாக் காளர்களுக்கு பணம் வழங்கியதை மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக ஒப்புக்கொண்ட தையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வெற்றிபெற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரமும் வெளியாகி யுள்ளது. இந்த விவகாரம் புதிதல்ல. அது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக் கிறது, அவ்வளவுதான்.
ஐ.மு.கூட்டணி-1 அரசுக்கு இடதுசாரி கட்சி கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண் டன. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது பெரும் தில்லுமுல்லு திருகு தாள வேலைகளை காங்கிரஸ் மேற்கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களை அப்பட்டமாக விலைகொடுத்து வாங்கி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது.
மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதை அப்பொழுதே அம் பலப்படுத்தின. இதுகுறித்து விசாரிக்க நாடாளு மன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட வில்லை.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப்பிரச்சனை பெரும் அமளியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து பிரதமர் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இந்தக்குற்றச் சாட்டை பிரதமர் மறுக்க வேண்டும், இல்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்-பேண்ட் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என்று அடுத்தடுத்து வெளிவந்த ஊழல் பிரச்சனைகளால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற கேவலமான காரியத்தில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளது தேசத்தின் எதிர்காலம் குறித்தும், நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்தும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
2008ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப் பின் போது பணம் கொடுத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அந்த வாக்கெடுப்புக்கு முன்பு நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் தம்மால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று வருத்தப்பட்டார். ஆனால் அவரது கட்சி சுதந்திரமாக எத்தகைய திருவிளையாடல்களில் ஈடுபட்டுள்ளது என்பதைத்தான் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள் உணர்த்துகின்றன.
பணம் பாதாளம் வரை பாயும் என்று எளிய மக்கள் கூறுவார்கள். அந்தப்பணம் பாராளு மன்றத்தையும் விட்டு வைக்கவில்லை என் பதையே இது காட்டுகிறது. ஏற்கெனவே கேள்வி கேட்க எம்.பிக்கள் பணம் வாங்கிய விவகாரம் வெளியானது. இப்போது வாக்களிக்க வாங்கிய தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எங்கே போகி றோம் நாம்?

- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக