மேலே நீங்கள் கண்டது சமீபத்தில் எனது மின்னஞ்சலுக்கு வந்த ஒரு ஸ்லைடு ஷோ வீடியோ காட்சி. இந்தியா குறித்து மிகவும் கவலைப்பட்டு உழலை ஒழிக்க என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டிருந்தது. வந்தே மாதர பாடலின் இசை பின்னணியில் முழங்க இந்தியாவில் நடந்த ஊழல்களை பட்டியல் போட்டது மட்டுமல்ல, இருக்கின்ற இந்தியாவையும் காட்சி படுத்தியது.
- 80 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் சம்பாதிக்கும் நாடு நமது நாடு?
- கடந்த 10 ஆண்டுகளில் 1,99,132 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்?
- கோடிக்கணக்கான மக்கள் தெருக்களில் வாழும் தேசம் இது?
- உணவு தானிய கிடங்குகளில் இருக்கும் அரிசியை எலிகள் சாப்பிடும் போது சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்டினி சாவுகள் நடக்கும் புன்னிய பூமி இது? போன்ற விபரங்களுடன் காட்சிகள் வந்தன.
அடுத்து, இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல் பணத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என பட்டியல் போட்டது.
- 160 வாகனங்கள் நிற்கும் வசதியுடன், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதியுடன் பல்லாயிரம் கோடி மதிப்பில் அம்பானி கட்டி இருக்கும் வீட்டின் அருகில்தான், தாராவி என்ற பகுதியில் ஒரு ஏக்கரில் 18,000 மக்கள் வசிக்கும் நிலையும் உள்ளது?
- இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மூன்று கிராமங்களுக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டி இருக்கலாம்!
- 24 லட்சம் பள்ளிக்கூடங்களை கட்டி இருக்கலாம்!
- 5 லட்சம் செலவில் 14 கோடி வீடுகளை கட்டி இருக்கலாம்!
- 600 மெகாவட் உற்பத்தி திறன் கொண்ட 2700 அனல் மின் நிலையங்களை உருவாக்கி இருக்கலாம்!
- 6 லட்சம் கிராமங்களுக்கு மின்வசதி கொடுத்திருக்கலாம்!
- 14 லட்சம் கிலோமீட்டர் சாலை போட்டிருக்கலாம், அதாவது இந்தியாவை 97 முறை சுற்றுவதற்கு சமம்!
- ஒவ்வொரு குடிமகனுக்கும் 56,000 ரூபாய் கொடுக்கலாம்!( யப்பா கலைஞர் காதுல விழுந்துட போவுது)
- 56 முக்கிய நதிகளை 121 வருடங்களுக்கு சுத்தப்படுத்தலாம்!
- 100 நாள் வேலை உறுதி சட்டத்தை 90 வருடங்களுக்கு அமலாக்கலாம்!
- 60 கோடி மக்களுக்கு நானோ கார் வாங்கிக்கொடுக்கலாம்!
- இந்த கொள்ளை 27 சதம் உள்நாட்டு உற்பத்திக்கு சமம்!
இப்படி பல தகவல்களை காட்சி படுத்திய இந்த நல்ல தொகுப்பில் முக்கியமான இரண்டு பிரச்சனைகள் உள்ளது. 1. இந்த ஊழல் வரலாற்றில் சற்றும் சலைக்காத இன்னூம் சொல்லப்போனால் இந்த தேசத்தினை எல்லையில் நின்று காக்கும் ராணுவ வீரர்களின் பினங்களை வைத்து அரசியல் நடத்திய பி.ஜே.பி கட்சியை சார்ந்த அய்யோக்கியர்களை கண்டுக்கொள்ளவில்லை. 2. மாற்று என்ன என்பதில் மக்களை மதத்தின் பேரால் மயக்கும் ஃபிராடுகளான போலி சாமியார்கள் ரவிசங்கர் மற்றும் ராம்தேவ் போட்டோகள் இருப்பது.
இது இந்துத்துவத்தின் நூதன மோசடி. இந்த வீடியோவில் அவர்கள் காட்சிப்படுத்தியது எல்லாம் முக்கியமானதா எனில் ஆம் என்பதே பதில். ஆனால் முழுமையான உண்மையை மறைப்பதும் ஒருவித ஊழல் அல்லது மோசடிதானே? இந்திய நாட்டின் வரலாற்றில், நாட்டிற்காக போராடி இறந்து போன ராணுவ வீரர்களின் சவப்பெட்டி வாங்குவதிலூழல் செய்த கட்சி பி.ஜே.பியாகும். டெகல்கா.காம் இணையதளம் பி.ஜே.பி தலைவர்களின் ஊழல் பேரத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டது. அதே போல இந்து போலி சாமியார்களின் கபடதனங்களை மக்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆக மாற்று இவர்கள் அல்ல. பல அண்டுகாலம் ஆட்சி செய்தாலும் இன்றுவரை ஊழல் கறைபடியாத இடதுசாரிகளே உண்மையான மாற்று. இதை இந்த இணைய தளம் சொல்ல மறுப்பது ஏனோ?
இந்திய ஊழல்களுக்கு எதிராக உண்மையை பேசச் சொல்லி அதில் உண்மையை மறைக்கலாமா?
நன்றி . S.G.ரமேஷ் பாபு
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக