உழைப்புக்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப் படும் ஜப்பான் மக்கள் இன்று மிகப் பெரும் துய ரத்தைச் சந்தித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பூகம்பம் - சுனாமி என்ற இரட்டைத் தாக்குத லுக்கு எண்ணற்றோரை பலி கொடுத்திருக் கிறார்கள். தரை மட்டமாகிப்போன ஊர்களை மறுகட்டுமானம் செய்கிற சவால் மிக்க பணியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிற உலகம், இயல்பு வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கான அவர்களது போராட் டத்தில் தோள்கொடுக்கவும் செய்யும்.
பலியானவர்கள் எத்தனை பேர் என்ற முழு மையான தகவல்கள் இனிமேல்தான் வரவேண் டும். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந் திருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.
இம்முறை ஜப்பான் சுனாமியில் எழுந்த சுமார் 33 அடி உயர அலைகளின் மோதலில் ஏரா ளமான கப்பல்கள் தலைகீழாகப் புரட்டப்பட்டு கடலோர ஊர்களுக்கு உள்ளே கொண்டுவந்து போடப்பட்டன. லட்சக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பல ரயில்கள் பயணிகளோடு அடித்துச் செல்லப்பட் டன. விமான நிலையங்கள், உருட்டித் தள்ளப் பட்ட விமானங்கள், கார்களின் குப்பை மைதா னங்களாக மாறியுள்ளன.
நிலைமையின் விபரீதத்தை மேலும் தீவிர மாக்குவது எதுவென்றால், பல அணு மின் நிலை யங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுதான். அணு உலைகளின் பாதுகாப்புச் சுவர்கள்தான் சேத மடைந்தன, கதிர்வீச்சு அபாயத்திலிருந்து உலை கள் தப்பித்துவிட்டன என்று முதல்கட்டத் தக வல்கள் கூறுகின்றன. எனினும், வழக்கத்துக்கு மாறான அளவு கடந்த வெப்பத்தின் காரணமாக அந்த உலைகள் உருகிவிடும் அபாயம் இருப் பதாக ஒரு அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. முன் னெச்சரிக்கையாக, அணு மின் நிலையங் களைச் சுற்றியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டி ருக்கிறார்கள். முகக்கவசமோ, மேலங்கியோ இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல பெட்ரோலிய எண்ணெய்க் கிடங்குகள் தீப்பற்றி எரிவது, வெப்ப அதிகரிப்புடன் கடுமையான காற்றுமண் டல மாசுக் கேட்டிற்கும் இட்டுச் சென்றுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ஏகா திபத்தியம் சோதித்துப்பார்த்த அணுகுண்டுக ளால் ஏற்பட்ட பேரழிவைச் சந்தித்தவர்கள் ஜப் பானியர்கள். இன்று ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு அபாயம் உள்ளிட்ட சவால்களை ஜப்பான் அர சும், நிர்வாக எந்திரங்களும், மக்களும் கூட்டாக சமாளிப்பார்கள் என்று உலகம் எதிர்பார்க்கிறது.
திடீர் இயற்கைத் தாக்குதல்களிலிருந்து தப் பிப்பதற்கான முன் தடுப்பு அமைப்புகள் ஒப்பீட் டளவில் வலுவாக உள்ள நாடு ஜப்பான். அந்த ஏற்பாடுகள் பலவீனமாக இருந்திருக்குமானால் தற்போதைய இழப்புகள் இன்னும் பல மடங்கு மோசமாகியிருக்கும். இது, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் எந்த அளவுக்கு விழிப்புடன் இருந் தாக வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. வருமுன் காப்பதில் மென்மேலும் வலுவான, ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தி யாக வேண்டும். எப்போதாவதுதான் இப்படிப் பட்ட தாக்குதல்கள் நிகழப்போகிறது என்ற மனப்போக்கிற்கு இடமளிக்காமல் - மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் இயற்கைப் பாதுகாப்போடும் சம்பந்தப்பட்டது என்ற உணர்வோடு, சுனாமி எச்சரிக்கை, அணு மின் நிலையங்களின் அதிகபட்ச பாதுகாப்பு உள் ளிட்ட நடவடிக்கைகள் உயர் முன்னுரிமை யோடு கையாளப்பட்டாக வேண்டும் என்ற பாடம்தான் அழுத்தமாகக் கற்பிக்கப்படுகிறது.
நன்றி .தீக்கதிர்

- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக