தமிழ்
நாட்டில் நிலவி வரும் கடுமையான மின் வெட்டால் பெரிதும் பாதிப் படைந்து
அமைதியை இழந்த மக்கள் ஆங்காங்கே போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்
றனர்.மறுபுறம், இந்த மின் வெட்டு பாதிப்பால் பிறந்த குழந்தைகளும் தப்ப
வில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. நகர் புறங்களில் உள்ள அரசு
மருத்துவமனைக்கு அரசின் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் ஜென ரேட் டர்
வசதி செய்து கொடுத் தாலும் பிறந்த குழந்தைக ளும், உள் நோயாளிகளும் நாள்
முழுவதும் இருளில் முழ்கும் நிலையே உள்ளது.இதற்கு உதாரணம் சிதம் பரம் அரசு
மருத்துவமனை.கடந்த ஞாயிறன்று இரவு 8 மணிக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனை
முழு மையாக இருளில் முழ்கியது அப்போது மருத்துவம னைக்கு சென்று பார்த்து
நமக்கே அதிர்ச்சியாக இருந் தது.ஏன் என்றால் பிறந்து சில மணி நேரங்களே ஆன
பச்சிளம் குழந்தையை அவ ரது தாய் காற்று, வெளிச்சம் இல்லாமல் இருந்ததால்
கொசு கடியால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் வார்டை விட்டு
வெளியே அழைத்து வந்து தரையில் போட்டு மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்து கொசுவை
துணியால் விரட்டி கொண்டு இருந்தனர்.இதனை
பார்த்தவுடன் அங்கு இருந்த மருத்துவ மனை ஊழியர்களிடம் கேட்ட போது சார் ஜென
ரெட்டர் இருக்கு ஆன ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மின் கட்டு ஏற்பட்டால் என்ன
செய்யமுடியும் இந்த ஜென ரேட்டர் ஒரு மணி நேரம் ஒடினால் ஏழு லிட்டர் டீசல்
செலவாகிறது.
ஆனால் அரசு ஒரு நாளைக்கு 3 மணி நேரம் ஓடும் அளவுக்கு
தான் டீசல் க்கு பணம் கொடுக்குது எனவே நோயாளிகள் பாதிக்க கூடாது என்ற நோக்
கத்தில் நாங்கள் மற்ற 13 நேர மின் வெட்டை சமாளிக்க நாங்களே டீசல்
வாங்குகின் றோம் இதையெல்லாம் உயர் அதிகாரிக்கு சொன் னால் எப்படியோ
சமாளித்து பிரச்சனை இல்லாமல் ஓட் டுங்கள் என்கின்றனர்.இன்னும் சொல்ல போ
னால் ஜெனரெட்டர் தொட ர்ந்து ஒரு நாளைக்கு 16 மணி நேரம் ஓடுவதால் அடிக்கடி
ஏர் லாக் ஆகிவிடுகிறது இதற்கு உடனே மெக்கானிக் இல்லை பகலில் தான் அழைத்து
வந்து சரிசெய்ய முடியும் என்று அங்குள்ள நிர்வாக குறையை கூறுகின் றனர்.
எப்படியோ தமிழ் நாட்டை ஆளும அம்மா வுக்கு பிறந்த குழந்தைகள் இருக்கும்
இடத்துக்காவது மின்வெட்டு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா? இதுதான்
பிள் ளையை பெற்ற தாய்மார்க ளின் கண்ணீர் கதையாக உள்ளது.
:அ. காளிதாஸ்
நன்றி :தீக்கதிர்
ஆனால் அரசு ஒரு நாளைக்கு 3 மணி நேரம் ஓடும் அளவுக்கு தான் டீசல் க்கு பணம் கொடுக்குது எனவே நோயாளிகள் பாதிக்க கூடாது என்ற நோக் கத்தில் நாங்கள் மற்ற 13 நேர மின் வெட்டை சமாளிக்க நாங்களே டீசல் வாங்குகின் றோம் இதையெல்லாம் உயர் அதிகாரிக்கு சொன் னால் எப்படியோ சமாளித்து பிரச்சனை இல்லாமல் ஓட் டுங்கள் என்கின்றனர்.இன்னும் சொல்ல போ னால் ஜெனரெட்டர் தொட ர்ந்து ஒரு நாளைக்கு 16 மணி நேரம் ஓடுவதால் அடிக்கடி ஏர் லாக் ஆகிவிடுகிறது இதற்கு உடனே மெக்கானிக் இல்லை பகலில் தான் அழைத்து வந்து சரிசெய்ய முடியும் என்று அங்குள்ள நிர்வாக குறையை கூறுகின் றனர். எப்படியோ தமிழ் நாட்டை ஆளும அம்மா வுக்கு பிறந்த குழந்தைகள் இருக்கும் இடத்துக்காவது மின்வெட்டு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா? இதுதான் பிள் ளையை பெற்ற தாய்மார்க ளின் கண்ணீர் கதையாக உள்ளது.
நன்றி :தீக்கதிர்
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக