தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு டன் அறிவிக்கப்படாத
மின்வெட்டும் அமலில் இருக்கிறது. இதனால் சென்னையை தவிர்த்த மற்ற அனைத்து
நகரங்களிலும் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை மின்வெட்டு கடுமையாக
இருக்கிறது. இதனால் அன்றாட இயக்கமே தடைபட்டு நிற்கிறது.
குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தொழில்துறை முற்றிலும் முடங்கியிருக்கிறது. இதனால் தொழி லாளர்களும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை யிழந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங் களில் ஒரு மணி நேரம் மின்சாரம் வினியோகம் இருந்தால், அடுத்த ஒரு மணி நேரம் மின்தடை என்பது துல்லியமாக அமலாகிறது. இதன் கார ணமாக தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு இன் னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மின்வெட்டைக் கண் டித்து போராட்டங்கள் தீவிரமடைய துவங்கியி ருக்கின்றன. தொழில்துறையினர் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இரவு நேரங் களில் குடியிருப்புகளில் மின்தடை ஏற்படுவ தால் தூங்கக்கூட முடியாமல் மக்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வினியோகிக்கப்படும் மின்சாரத்தை ஓரளவு முன்னுரிமை கொடுத்து ஏற்றத்தாழ்வு இன்றி பகிர்ந்தளித்தாலே ஓரளவு மின்பற்றாக்குறையைச் சீர்செய்திட முடியும் என் கின்றனர் மின்துறை வல்லுனர்கள். தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், உற்பத்திக் கும் இடையே இருக்கும் இடைவெளி ஒரே நாளில் தீர்க்கும் விஷயமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.ஆனால்இருக்கும்மின்சாரத்தை பாரபட்சமின்றி வினியோகித்தாலே ஓரளவு சீராக இயங்க முடியும். ஆனால் இன்று சென்னையில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமே மின்வெட்டு இருக்கிறது. அதுவும் கூட சென்னையில் இருக் கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு கிடையாது, தடையற்ற மின்சாரம் போதிய அள விற்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 25 சதவீதம் அளவிற்கு சென்னையில் மட்டுமே பயன்படுத் தப்படுகிறது. ஒரே மாநிலத்திற்குள் சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற மாநகரங்களில் பலமணி நேரமும் மின்வெட்டு அமலாகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்தடையேயின்றி மின்சா ரம்வினியோகிக்கப்படுகிறது.இதுமிகவும்பாரபட்ச முடையது. குறிப்பாக உள்நாட்டில் இருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் மின்தடையால் திண்டாடி வருகின்றன. அதே நேரத்தில் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை லாபமடைய தடை யற்ற மின்சாரம்; இது எந்த வகையில் நியாய மாகும்? தமிழகத்தில் உள்ளஆடம்பரகேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்கள் ஆடம்பரத்திற்காக அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன. இதனை இரவு நேரங்களில் மட்டும் ஒழுங்கு படுத்தினாலே ஒரு நாளைக்கு 250 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும் எனக் கூறுகின் றனர். இதுதவிர மிகப்பெரிய தனியார் நிறுவனங் களின் விளம்பரத்திற்காக மாநகர் முழுவதும் ஏரா ளமான அதிக சக்தியுள்ள மின்சார விளக்கு களை பயன்படுத்துகின்றன. இதனையும் தவிர்த் தால் இன்னும் கூடுதலாக மின்சாரத்தைச் சேமிக்க முடியும். இப்படி பன்னாட்டு நிறுவனங் கள் மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிடப்படும் மின்சாரத்தை ஒழுங்குபடுத்தி, அதனை சிறு,குறு தொழில்கள், மருத்துவமனைகள், நீரேற்றும் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணி களுக்குத் திருப்பிவிட்டால், ஓரளவுப் பிரச்ச னையை சமாளிக்க முடியும். அதன் மூலம் பல லட்சக் கணக்கானோரின் நெருக்கடியை ஓரளவு குறைத்திட முடியும். |
நன்றி:தீக்கதிர் |
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக