காவிரி
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது. இரண்டா வது
சாகுபடிக்காவது தண்ணீர் வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு காவிரி நதிநீர்
ஆணையக் கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட
வேண்டுமெனக் கேட்டது. ஆனால் கர்நாடக மாநில அரசு மறுத்துவிட்டது.
ஆணையத்தின் தலைவரான பிரதமர் தலையிட்டு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த குறைந்தபட்ச அளவைக்கூட ஏற்கமுடி யாது என்று பிடிவாதமாக கர்நாடக அரசு நடந்து கொண்டது. அதனால் வேறு வழியின்றி தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. ஆணையத்தின் முடிவான 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்டோபர் 15ம் தேதி வரை கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதையும் கூட ஏற்க கர்நாடக பாஜக அரசுக்கு மனமில்லை. மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தது. மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது. நீதிமன்றம் செல்வதற்காகவே கண்துடைப்பாக மூன்று நாளுக்கு மட்டுமே திறந்துவிட முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையும் முன்பே திறந்துவிடப்பட்ட தண்ணீர் அடைக்கப்பட்டு விடும். இந்த முடிவைக் கூட அங்குள்ள சில கட்சிகளும் அமைப்புகளும் எதிர்த்து நடவடிக் கைகளில் இறங்கியுள்ளன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரச்சனையைத் தொடர்ந்து இரு மாநில மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த சில சீர்குலைவு சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கிடையே மாநில அரசு புதனன்று சீராய்வு மனுதாக்கல் செய்யவுள்ளதாக திங் களன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் மதச் சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் சிலர் ராஜி னாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத் துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் பிரச் சனையைத் தீர்ப்பதற்கு உதவாது. மேலும் சிக்கலாக்கவே செய்யும். தமிழகத்தின் பாசன உரிமையை மறுப்பது போன்ற கர்நாடக அரசின் நடவடிக்கை தவறா னது. காவிரி ஆணையத்தின் முடிவின்படி 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்டோபர் 15 வரை திறந்துவிடுவதே நியாயமான நடவடிக் கையாகும். அதுதான் இரு மாநில மக்களின் குறிப்பாக விவசாயிகளின் நலன்களுக்கும் ஏற்றது. அதைவிடுத்து ஒரு மாநில மக்களை மற்றொரு மாநில மக்களுக்கு குறிப்பாக விவ சாயிகளுக்கு எதிராகப் போராடும்படி தூண்டி விடுவது மாநிலங்களுக்கு இடையிலான ஒற்று மைக்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரானதாகும். காவிரி கர்நாடக, தமிழக மாநிலங்களை இணைத்திடும் நீர் உறவாகும். அந்த உறவு நீரடித்து நீர் விலகாது என்பதற்கேற்ப இரு மாநில அரசுகளாலும் மக்களாலும் வலுப்படுத்தும் வண்ணம் வளர்ந்திட வேண்டும். அதற்கு இரு மாநிலங்களும் அதனதன் உரிமைகளையும், கடமைகளையும் மதிக்கவும் நிறைவேற்றவும் வேண்டும். அதுவே காவிரி பாசனப்பகுதி விவ சாயிகளின் நலனுக்கு மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த விவசாய மேம்பாட்டுக்கும் உதவிகரமாக அமையும். நன்றி: தீக்கதிர் |
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக