Home » »

    Written By Sadhikcdm on ஜனவரி 25, 2011 | AM 3:32

    பரமஏழை முதல் பரம்பரை பணக்காரர் வரை அனைத்து மக்களும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு காய்கறி வகை வெங்காயம்.
    ‘எந்த ஒரு பொருளின் விலையையும் நாங்கள் தீர்மானிக்கமாட்டோம். சந்தையே அதன் விலையை தீர்மானித்துக்கொள்ளும்’, இது தான் மத்திய காங்கிரஸ், திமுக அரசின் விலைவாசிக் கொள்கை.
    மிக அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல் முதல் வெங்காயம் வரை அனைத்து பொருட்களின் மீதான காங்கிரஸ் அரசின் கொள்கை யாருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?
    உலகில் அதிக வெங்காயம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு இந்தியா. குஜராத், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வெங்காய ஏற்றுமதி மண்டலமாக கருதப்படுகிறது. வளைகுடா நாடுகள், மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி 200708ல் 1035.78 கோடி ரூபாயாக இருந்தது. இது 200809ல் 1827.52 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 200809ல் 17.83 லட்சம் டன்னாக இருந்த ஏற்றுமதி 200910ல் 18.14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
    நவம்பர்ஜனவரி மற்றும் ஜனவரிமே என இரண்டு பருவங்களில் வெங்காயம் அறுவடை செய்யப்படுகிறது. அப்படியெனில் வெங்காயம் அறுவடை துவங்கிய அடுத்த மாதமே கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்? விலை உயர்ந்ததின் மர்மம் என்ன?
    அதிக மழையால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு காரணம் எனினும், மத்திய அரசு விழிப்புடன் இருந்திருந்தால் இந்த தட்டுப்பாட்டை எளிதில் தவிர்த்திருக்க முடியும். ஆனால், இரண்டு பெரிய காரணங்கள் ஆபத்துகளாக தொடர்கின்றன.
    உணவு தானியம், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், உள்நாட்டு மக்களின் தேவையை புறக்கணித்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது பெரும் இலாபத்தை ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டதாகும். இதனால் ஏற்றுமதி மண்டல விவசாய நிலங்கள் அதிகமாகி உள்நாட்டு தேவைக்கு உற்பத்தியாகும் வேளாண் நிலங்கள் குறைந்து வருகின்றன. இது ஆபத்தான அறிகுறி. இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு. ஆனால், உணவுத் தட்டுப்பாடு, உணவு பொருள் விலையேற்றம் அதிகம் உள்ள நாடு என்ற பெரிய முரண்பாட்டை உருவாக்கிவிடும்.
    இரண்டு, பாகிஸ்தானுக்கு நாம் வெங்காயம் ஏற்றுமதி செய்கிறோம். ஆனால், இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் பாகிஸ்தானிலிருந்து அதே வெங்காயத்தை இந்திய வியாபாரிகள் இறக்குமதி செய்கிறார்கள், இது ஏமாற்று வித்தையாகவும், நவீன பதுக்கலின் வடிவமாகவும் தெரிகிறது.
    இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் அளவு உயர்ந்து, அதிகரித்துள்ள லாபத்தின் மூலம் பயனடைந்தது விவசாயிகளா? பெரும் முதலாளிகளா? இந்தியாவிலிருந்து கோதுமையை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து பின் அதிக விலையில் இறக்குமதி செய்த கதை மட்டுமல்ல, பருத்தியை களவாடிச்சென்று துணியாக மாற்றி நம்மிடமே வியாபாரம் செய்த வரலாறும் நம் நினைவுகளில் வருவதை தடுக்க முடியவில்லை.
    முன்பேர வர்த்தகம் மூலம் உணவுப் பொருள்களில் சூதாட்டத்தை நடத்தும் இந்திய பெரும் முதலாளிகள் தற்போது டாலர் மூலமான சூதாட்டத்தை நடத்துகின்றனர் என்பதை மக்களுக்கு சொல்லியாக வேண்டியுள்ளது.
    உணவுப் பொருள் விலைவாசி உயரும், குறையும். அதெல்லாம் நிலையாக கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்க முடியாது என நிதிமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும் நியாயத்தை உரித்துப் பார்த்தால்.., வெங்காயம் ஒன்னுமில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனேனில் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி சந்தையே விலையை தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டது. அதாவது சந்தை சக்திகளே இந்த நாட்டை ஆளுமாம். ஆனால், வரலாறு நிருபிக்கும் மக்கள் மந்தைகள் அல்ல என்று...
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .