Home » » இலங்கையின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக

    இலங்கையின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக

    Written By Sadhikcdm on ஜனவரி 25, 2011 | 3:03 AM

    கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங் கைக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்ததில் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி ஜெகதாபட்டினம் கடல் அருகே பாண் டியன் என்ற இளைஞரை இலங்கை கடற்படை யினர் சுட்டுக் கொன்றனர். அந்தப் பதட்டம் தணி வதற்குள் மீண்டும் ஒரு படுகொலை நடந்தேறி யுள்ளது.

    வழக்கம்போல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரி வித்துள்ளார். இந்தியத் தூதரகத்திடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இலங்கை கடற் படை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது என்று கூறுவது அடிப்படையற்றது என்று இலங்கை கடற்படையின் செய்தித்தொடர்பாளர் நாடகம் ஆடியுள்ளார். இதே பதிலை இலங்கை அரசு தரக்கூடும். படுகொலையை நேரில் கண்ட மீன வர்களிடம் உண்மையான விபரங்களை தமிழக அரசு பெற்று, அதை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசில் திமுக அங்கம் வகிக் கிறது என்ற முறையில் கடுமையான நிர்ப்பந்தம் தர வேண்டும்.

    குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் எல் லை தாண்டி வந்த பாகிஸ்தான் மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். வங்கக் கடலில் வெளிநாட்டு மீன்பிடி இயந்திரப் படகுகளையும் இந்திய கடற்படை சிறைபிடித்து, வெளிநாட்டு மீனவர்களை கைது செய்வதுண்டு. புயல், வெள் ளம், கடலின் நீரோட்டம் மற்றும் இயந்திரக் கோளாறுகள் காரணமாக மீன்பிடி விசைப் படகு கள் திசைமாறி சர்வதேச எல்லையைக் கடந்து விடுவதுண்டு. அவ்வாறு செல்லும் மீனவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண் டும்; அதை விடுத்து நடுக்கடலில் சுட்டுக் கொல்வது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

    கடந்த 12ம்தேதி ஜெகதாப்பட்டினம் கடல் அருகே தமிழக மீனவர் சுடப்பட்டு இறந்த போது சட்டசபையில் அனைத்துக் கட்சியினரும் கவ லை தெரிவித்தனர். கடல் எல்லைப் பகுதியில் ஒளிரும் விளக்குகள், மிதவைகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டது. இந்திய - இலங்கை கடல் எல்லை என்பது ஒரு குறுகிய தொலைவு தான். இந்த பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த வீரர்களும் உண்டு. இப்பகுதியில் இருநாட்டு கடற்படையினரும் மனது வைத்தால் கடல் எல்லை குறித்து மீனவர் களுக்கு வழிகாட்டுவது ஒரு பிரச்சனையே அல்ல. மனித நேயத்தோடு மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் பிரச்சனை.

    அண்மைக்காலத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் அரசு முறையிலான நட்புறவு வலுவடைந்துள்ளது. இலங்கை அதிபர் இந்தியா வந்து செல்வதும், இந்திய அமைச்சரும் உயர் அதிகாரிகளும் இலங்கை சென்று வருவதும் அதிகரித்துள்ளது. புதிய புதிய பொருளாதார ஒப்பந் தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியன் வங்கி தனது கிளையை யாழ்ப்பாணத்தில் தொடங்கி யுள்ளது. இன்று பல வங்கிகளும், தொழில் நிறு வனங்களும் தங்களது கிளைகளை இலங் கையில் துவக்கத் தீர்மானித்துள்ளன. இலங்கைக் கும் இந்தியாவுக்கும் கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வரு கின்றன. இந்த அளவுக்கு மாறுதல் ஏற்பட்ட பிற கும் நடுக்கடலில் தமிழக மீனவர்களை கொல்வ தற்கு கடிவாளம் இட வேண்டாமா? இந்த பிரச்ச னையில் மத்திய அரசு தனது ராஜிய ரீதியான தலையீட்டை வலுவாகச் செய்ய வேண்டும் என்பதையே தமிழக மீனவர்களும் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    0 comments:

    கருத்துரையிடுக

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .